குஷ்பு எதற்காக திமுகவில் சேர்ந்தார்? தி முகவிலிருந்து காங்கிரசுக்கு வந்தார்? காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு ஏன் போனார்? – கே.எஸ். அழகிரி

அட, அத விடுங்க சார்! உங்கள் தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற குற்றவாளியை அரவணைத்த கட்சியினரோடு, ஏன் கூட்டணியில் உள்ளீர்கள் என்பதை முதலில் நீங்கள் சொல்லுங்கள்! நாராயணன் திருப்பதி
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும்வரை ஜாமீன் வழங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார் – திருச்சியில் காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

ஜாமீன் தர வேண்டிய இடத்தில் இருப்பது பாஜக மாநில தலைவரா (அ) நீதிமன்றங்களா? மாநில பாஜக தலைவர்தான், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா என்ற சந்தேகம் அண்ணாமலையின் பேச்சிலிருந்து எழுகிறது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்ட மற்றவர்கள் இன்றும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் வளர முடியவில்லை என்பதால் செந்தில் பாலாஜி குறி வைக்கப்பட்டிருக்கிறார் – […]