கிருஷ்ணருக்கு மணல் சிற்பம்

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, ஒடிசாவின் புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ள மணல் சிற்பம்.
தர்மத்தை நிலைநிறுத்த பிறந்த கிருஷ்ணர்…!

கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.மகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். […]
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்

குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள ஸ்ரீராம சுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து படப்பை துர்க்கை சித்தர் பீடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றதுடன் கிருஷ்ணமாச்சாரி வசந்த மண்டபத்திற்கு சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏபிஜிபி நிர்வாகி கே.வெங்கட்ராமன், லலிதா சகஸ்ரநாம மண்டலி நிர்வாகி திருமதி கே. விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். மீனாட்சிசுந்தரம் மற்றும் பல்வேறு ஆன்மிக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணர் பொம்மைகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரோம்பேட்டை நேரு நகர் ஆர்.பி.ரோட்டிலுள்ள பவானி கலை கூடத்தில் விதவிதமான வண்ண வண்ண கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வைத்திருப்பதை படத்தில் காணலாம்.