சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து உயரும் பெரிய வெங்காயம் விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.44-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நிலவரப்படி கிலோ ரூ.44-க்கு விற்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் வெங்காயத் தேவைக்கு வெளிமாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. நாசிக்கில் வரத்து குறைவாக […]
சென்னையில், மெட்ரோ ரெயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் – நீதிபதிகள்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சென்னை கோயம்பேட்டை சுற்றிய ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் – உயர்நீதிமன்றம்

கோயம்பேடு ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் உத்தரவு போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளையும் ஏற்றலாம் – உயர்நீதிமன்றம் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது – உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்
கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – எங்கு பஸ் ஏறுவது?
விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும். முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (விழுப்புரம், திருச்சி மார்க்கம்) […]
சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. கோயம்பேடு புறநகர்பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரையும், அதில் பஸ் ஒன்று தத்தளித்து செல்வதையும் படத்தில் காணலாம்.
கோயம்பேடு பழ வணிக வளாகம் – விடுமுறை இல்லை!

தீபாவளி பண்டிகை அதை தொடர்ந்து வரும் நோன்பு விரதம், பூஜை உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பழங்களின் தேவை அவசியம் என்பதால் கோயம்பேடு பழ வணிக வளாகம் விடுமுறையின்றி வழக்கம் போல் செயல்படும் என அனைத்து பழ வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் (13-11-2023 திங்கள்கிழமை) கோயம்பேடு வணிக வளாகத்திற்கு விடுமுறை என்ற அறிவிப்பு காய்கறி சந்தைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பழச் சந்தை வழக்கம் போல் செயல்படும் என சென்னை பழக்கமிஷன் […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.5 குறைந்து, ஒரு கிலோ ரூ35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 35-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.