குரோம்பேட்டையில் நடந்த ஆடிப்பூர திருவிழா
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ நவ சக்தி துர்கைக்கு பெண் பக்தர்கள் வளையல் மலர் பந்தல் அமைத்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
கோயிலுக்குப் பிறகு புத்தகம் படிப்பேன் -ரஜினி அறிவிப்பு
கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் எழுதிய வேல் பாரி நாவலில் ஒரு லட்சம் பிரதிகள் விற்ற வெற்றி விழா கொண்டாட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். யாருக்காக அழுதான் புத்தகத்தில் ஜெயகாந்தனின் எழுத்து வியப்பை அளித்தது. ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்துள்ளேன். புத்தகத்தை பற்றி பேச சிவக்குமார், கமல்ஹாசன் இருக்கின்றனர். என்னை ஏன் அழைத்தார்கள். […]
மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா கடந்த ஜூன் 27-ந் தேதி துவங்கியது. தொடர்ந்து 7ஆம் நாள் மற்றும் 11ஆம் நாளில், மேலக்கடலாடியில் உள்ள அவரது நினைவிட அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாகக் […]
லட்டு டோக்கன் பெற QR கோடு முறை – திருமலை தேவஸ்தானம்.*
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் லட்டு வாங்க இனி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். பிரத்யேக எந்திரத்தில் QR கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம். டச் ஸ்கீரினுடன் கூடிய பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் QR கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை UPI (அ) பிற டிஜிட்டல் முறை மூலம் […]
தமிழ்நாட்டில் கோவில் கோவிலாக செல்லும் கவர்னர் ரவி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆன்மிக பயணத்தை தொடங்கிய ஆளுநர் ரவிஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து நேற்று ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, குணசீலம், ராமேசுவரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் […]
புகழ்பெற்ற திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா சுவாமி புறப்பாட்டின் போது வாணவெடி வெடிக்க தேவஸ்தானத்தில் பணம் இல்லையாம்

கடந்த மாத வருமானம் 2 கோடியாம் ,வெடிக்கு உபயதாரர் இல்லாததால் வெடி போடவில்லை என்று திருக்கோவில் இனை ஆணையர் தகவல் , அறநிலையத்துறை உண்டியல் பணத்தை கோவிலுக்கு கூட செலவு செய்யாதா ? முன்கூட்டியே நிர்வாகம் வாணவெடிக்கு உபயதாரர் தேவை என்று விளம்பரம் செய்திருந்தால் நூற்றுக்கணக்கில் வந்து இருப்பார்கள். இணை ஆணையர் கார்த்திக் ஏன் இதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை ?என திருச்செந்தூர் அணைத்து சமுதாய மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த சோபனா ராமச்சந்திரன் நியமனம்.

ஸ்ரீ சக்கர டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சோபனா இதுவரை தக்காராக இருந்த கரு முத்து கண்ணனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முதல் பெண் தக்கார் ஆவார்