கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது.

வடவள்ளி பகுதியில் உள்ள தக்ஷா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர் உரிமையாளர் மோகன் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதமானது. விமானம் புறப்படத் தயாரானபோது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு ஆளுநர் சென்ற இண்டிகோ விமானம் கோவைக்கு புறப்பட்டது.