கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்து மிரட்டிய காட்டு மாடுகள்

பொதுமக்கள் அச்சம் கொடைக்கானல் : கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.கொடைக்கானலில் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுமாடுகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் கல்லுக்குழி குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு கூட்டம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குடியிருப்புகள் புகுந்த […]
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து […]
கொடைக்கானலில் கோல்ப் விளையாடிய முதல்வர்

திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப்மைதானத்துக்கு முதல்வர் சென்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாலை 5.45 மணிக்குமேல் கோல்ப் கிளப்புக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து பேட்டரி கார்மூலம் மைதானத்துக்குச் சென்றார்.அங்கு சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி […]
இ-பாஸ் முறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு!..

கூட்ட நெரிசல் அதிகரித்ததையடுத்து இ-பாஸ் முறையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது சென்னை உயர்நீதிமன்றம்!
கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர் தீயனைப்பு துறையினர்
திண்டுக்கல், கொடைக்கானலில் புரட்டி எடுத்த கனமழை

திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அவதி

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுற்றுலா தளங்களில் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.