இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் 40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது
பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,250 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை நகராட்சி பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உள்பட மூவர் கைது.
சென்னையில் இருந்து கேரளா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது!

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – இருவர் உயிரிழப்பு! சென்னையில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு சென்ற தனியார் பேருந்து, திருவாழி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி; வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கேரள கிராமங்களில் மீண்டும் மாவோயிஸ்ட் நடமாட்டம்!

கேரள மாநிலம், வயநாடு மற்றும் கண்ணுார் பகுதிகளில், மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பகுதி முக்கோடு காடு. இதை முச்சந்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர், 2013ல் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவை அமைத்தனர். எனினும், ‘என்கவுன்டர்’ மற்றும் தொடர் கைது நடவடிக்கைகளால், அவர்களின் நடவடிக்கை முடக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மாவோயிஸ்ட் அமைப்பை […]
கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம்

கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலவரம்பு சட்ட விதியின் கீழ் கட்டடங்கள் கட்ட விதித்த தடையை விலக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனவும் கேரள காங். கட்சி புகார் தெரிவித்துள்ளது. போராட்டம் காரணமாக இன்று மாலை 6 மணிவரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்; போக்குவரத்து எதுவும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.
கேரளாவுக்கு 40 திமுக கவுன்சிலர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற மேயர்.. சிக்க வைத்த வைரல் வீடியோ

தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய மாவட்ட செயலாளர் ஆலோசனைப்படி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்ட புது வியூகம் அமைத்ததாகவும், அதன்படியே இந்த சுற்றுலா திட்டம் எனவும் கூறப்படுகின்றது. சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40 பேர், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கேரளாவுக்கு மூன்று நாள் இன்ப சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்கள். ஒவ்வொரு கவுன்சிலரும் அவருடன் மூன்று பேரை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டு, அதில் சில கவுன்சிலர்கள் தனது குடும்பத்தினரையும், சிலர் […]
கேரளம்’ என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கொண்டுவந்தார். தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது: மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயரிலும், பிற மொழிகளில் ‘கேரளா’ என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, […]
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக, கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் பினராயி விஜயன்.