பிரியாணி விளம்பரம் -துல்கர் சல்மானுக்கு சம்மன்

கேரளாவில் நடிகர் துல்கர் சல்மான் விளம்பர தூதராக உள்ள நிறுவனத்தின் பிரியாணி அரிசி தரமில்லை என கேட்டரிங் நிறுவனம் வழக்கு போட்டு உள்ளது. திருமண விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு என கேட்டரிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது டிசம்பர் 3ம் தேதி துல்கர் சல்மான் நேரில் ஆஜராக கேரள நுகர்வோர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

கேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000

தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது என அந்த மாநில முதல்வர் பிரணாய் விஜயன் அறிவித்துள்ளார் 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

சபரிமலையில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு கூட்டத்தில் முடிவு.செய்யப்பட்டது *நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடங்குகிறது ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். என்று- திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது. கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இம் மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். வால்பாறை நீலகிரி தவிர வேறு எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை. தென்காசியை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு விட்டு விட்டு […]

சபரிமலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை

சபரி மலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டு வருகிறார்கள். இதனை சாப்பிடும் விலங்குகள் இறந்து விடுகின்றன சமீபத்தில் ஒரு ஆண் யானை இது போன்று பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இதுபோன்று மலைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலை பகுதியில் ஹோட்டல்கள் மூலம் 24 டன் கழிவுகள் உருவாகின்றன. அதனையும் நீதிமன்றம் கண்டித்து […]

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடு திரும்பிய கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதியானது

தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில், அவருக்கு கிளாட்-1பி வகை குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருப்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கடந்த 2022ல் ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவக் காரணமானது கிளாட்-1பி வகை குரங்கம்மை வைரஸ். இதற்கு முன் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிளாட்-2 வகை வைரஸ் தொற்று இருந்தது. தற்போது வீரியமிக்க கிளாட்-1பி வகை […]

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள் – எஸ்.பி. மருத்துவமனையில் விசாரணை

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது

சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அனுப்பியது.