தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செய்ய முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சத்தான உணவுகளைத் உண்ணும் போது, அந்த உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் முழுவதுமாக உறிஞ்சும். எனவே தான் காலை உணவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அதுவும் ஒருசில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. […]