கருணாநிதியின் மூத்தமகன்மு.க.முத்து.மரணம்
தமிழக முன்னாள் முதல்வர் ம.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் கருணாநிதி பிறந்தநாள் விழா
தாம்பரம் சித்த மருத்துவமனையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது.
கருணாநிதி குறித்து ஏற்கனவே பாடப்பட்ட பாடல் ஒன்றை விக்ரவாண்டி பிரச்சாரத்தில் மீண்டும் பாடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை

தி.மு.க. ஐ.டி.விங் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்த திருச்சி போலீசார், 3 மணி நேர விசாரணைக்குப்பின், திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் பதியப் படவில்லை என்று கூறி நீதிபதி சுனாமிநாதன் அவரை அனுப்பி வைத்தார்.
கருணாநிதி குறித்து பாடல் பாடியதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம் இன்று

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று காலை […]
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ஆம் தேதி திறப்பு

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பு.
கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலை வைக்க ஆசைப்படலாமா.?

– அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்’, மறைந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலர் புகழ்பெற காரணமாக இருந்தது. அதன் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரம், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். மேற்சொன்ன தலைவர்கள் அனைவராலும், ‘முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அந்த வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. […]
கருணாநிதி நூற்றாண்டு விழா. 100 பேருக்கு வீடு

சென்னை ஆக, 10 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் வரும் மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.