தமிழகத்திற்கு தற்போது கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை- கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் – டி.கே.சிவக்குமார். கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது, இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது. தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் மறுப்பு.

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 5,803 கனஅடியாக குறைவு

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 7,973கனஅடியில் இருந்து 5,803 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,803 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கனஅடியாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.72 அடி; கபினி அணையின் நீர்மட்டம் 76.35 அடியாகவும் உள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,243 கனஅடி நீர்திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,243 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,243 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 5,000 கனஅடியாக உள்ளது

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 10,302கனஅடி நீர்திறப்பு..!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,302கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,302கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 5,000கன அடியாக காணப்படுகிறது.