கர்நாடக முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதி குமாரசாமி உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி கர்நாடக அரசு நீர்திறப்பதை குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து நீர் திறப்பது குறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்ய உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைத்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

“அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகுமுக்கிய முடிவு எடுக்கப்படும்”

தமிழ்நாட்டுக்கு தண்ணி தர தான் மேகதாது அணை”-கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வித்யாசமான விளக்கம்

உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை வேண்டாம் போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது; மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது-கர்நாடக துணை […]

காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

“உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் பயிர்கள் கருகியுள்ளன”

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” “பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 15000 கனஅடி நீர் வெளியேற்றம் கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2688 கனஅடி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 17688 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்