கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 3.1 என பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் கடையடைப்பு

காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழக கர்நாடக எல்லை அருகே அத்திப்பள்ளி எனும் பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்

பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன். பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். -கமல்ஹாசன்

அக்டோபர் 10ம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க கனடாவுக்கு உத்தரவு: இந்தியா அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகளை வரும் 10ம் தேதிக்குள் திரும்ப அழைக்கும்படி கனடாவுக்கு இந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அங்கு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து நிஜ்ஜார் கொலைக்கு உதவியதாக கூறி இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது. […]

காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு, பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடகாவுக்கு அரிசி தர மறுத்த மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

தேவகவுடா பேரன் எம்.பி. பதவி இழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் தேவராஜ் கவுடா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த‌ பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரது சொத்து மதிப்பில் ரூ. 24 கோடி குறைவாக காட்டப்பட்டுள்ளது. தேர்தல் […]