குடும்ப உறுப்பினராக வளரும் காகம்
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் : ஷேக் யூசுப் – சஃபியா தம்பதியின் வீட்டில் ஒரு காகம் ஒரு வருடமாகவே தினமும் காலையில் வீட்டிற்கு வந்து மாலை வரை அவர்களுடனே இருக்கிறது. அதற்கு தானியங்களும், சோறும், சிக்கனும் உணவாக கொடுத்து வளர்த்து வருதாகவும்,கடந்த 2 நாட்கள் சாப்பிடாததால், பலகீனமடைந்துள்ளது, என்று அதற்கு சிகிச்சையளிக்க, ஷேக் யூசுப் – சஃபியா தம்பதியினர் காகத்தை கூடையில் வைத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியபட்டனர்.
கர்நாடக குகையில் 8 வருடம் வசித்த ரஷ்ய பெண் மீட்பு
கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு […]
மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கிய சித்தராமையா?

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்
முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது
கர்நாடகா : காவிரியில் இருந்து நீர் வெளியேற்றம் 50500 கன அடியாக உயர்வு

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசுக்கு கண்டனம்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடக அரசின் முடிவை ஏற்று கொள்ள முடியாது காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு போதிய நீர் வழங்க உச்ச நீதி மன்றத்தை நாட முடிவு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – முதல்வர்
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்வு: இன்று முதல் அமல்

ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது. அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு […]
“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்”

தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. கர்நாடகாவை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். காவிரி தண்ணீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் –சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிப்பு: போக்குவரத்துத்துறை உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தடை விதிப்பு என தெரிவித்துள்ளது.