மயங்கிய கார்கே.. தாங்கிப் பிடித்த நிர்வாகிகள்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிக் கொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு லேசாக மயங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. திடீரென அவர் பேச்சை நிறுத்தி நிற்கவே சிரமப்படுவதை கவனித்த நிர்வாகிகள், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அமர்ந்தார் கார்கே.
அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.