கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, அருமனை, களியல், திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறை கற்கள் நடுவே ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த வீடியோ கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும்போது பாறை மீது அமர்கிறவர்கள் கவனிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டு அந்த படங்களை பலரும் பகிர்ந்தனர். இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று சிலர் தெரிவித்த போதிலும், சமூக வலைதளவாசிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரையில் பாம்பு குவியல் என பகிர்ந்து வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் தகவலை பதிவிட்டுள்ளது. […]

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடலில் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல்

– மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

“குமரியில் 1995ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது”

“1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்” “தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்” “தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆவார்”

கன்னியாகுமரி வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ், சகோதர, சகோதரிகளே என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்

கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாதம் 16ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.