குமரியில் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்த மத போதகர் கைது…
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பெந்தெகொஸ்தே சபைக்கு சென்றிருக்கிறார். அங்கிருக்கும்போதகர் உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அவருடன் உறவு கொள்வதால் தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொண்டால் நோய்கள் குணமாகும் எனக் கூறி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது
காதலி வீட்டுக்குச் சென்ற வாலிபர் தூக்கில் தொங்கிய மர்மம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலியை பார்ப்பதற்காக இரவு வீட்டுக்குச் சென்ற காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடக்கிறது
கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்,

மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல தவிர்க்கவும் கோரிக்கை
தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு திருவள்ளுவர் சிலை வந்தடைந்தார். திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து வரும் நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

காலையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென வெளியேற்றப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தவிப்பு..
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரை நிர்வாணமாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் மனு

குமரியை சேர்ந்த நிர்மல் ஸ்டாலின், சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்
விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: முப்படை பாதுகாப்பு வளையத்தில் குமரி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள் தியானம்: மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை […]
“கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்”

தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் ரத்து
8 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருந்தது. நீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.