சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது குறித்து சிலை தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கையை சிலை தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு