காஞ்சி இளைய சங்கராச்சாரியார் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை இன்று சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி […]
காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் கொலை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார். கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார். […]
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஸ்தல விருட்சத்தை சட்ட விரோதமாகவும், ஆகம விரோதமாகவும் வெட்டிய அறநிலையத்துறை அதிகாரி

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரசமரதத்துடன் இணைந்த வேப்பமரம்,வில்வ மரம், இதற்கும் மேல் அநியாத்திற்கு உச்சத்திற்கு சென்ற இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் நடராஜன் ஸ்தல விருட்ச முருங்கமரத்தையே வெட்டியுள்ளார்கள். ஏன் இந்த மரத்தை வெட்டினா்கள் என்றால் அதில் தான் வேடிக்கையே […]
ஸ்ரீபெரும்புதூர் அருகேநாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக்கொலை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ரவுடி எபினாசர் (25) மீது நாட்டு வெடிகுண்டு வீசி கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் ஓட்டம் .கொலை செய்யப்பட்ட எபினேசர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது.சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை.
காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக ஒ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயணம் ஒத்திவைப்பு

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக புரட்சிப் பயணம் இன்று தொடங்கவிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டது. பொதுக்கூட்டம் மழை காரணமாக திடீர் ஒத்திவைப்பு வேறொரு நாளில் நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பண்ருட்டி பகுதியில் உள்ள தனது மாமியாரின் சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அந்த […]
ஆருத்ரா, ஐஎப்எஸ் நிறுவனங்களை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.24 கோடி மோசடி: 2 இயக்குனர்கள் கைது

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இணைந்து டே பைடே எனும் நிதி நிறுவனத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கினர். இதில், இருவரும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்களுக்கு நாள்தோறும் ரூ.1,500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்ட்களுக்கு நாள்தோறும் 500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது, முதலீட்டாளர்களை […]
காஞ்சிபுரம், செங்கல்பட்டு கவனம்.. 10 மாவட்டங்களில் இடியோடு மழை அடி வெளுக்கும் ..குடை அவசியம்

சென்னை: தமிழ்நாட்டில்இன்று 10 மாவட்டங்களில்கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலைஆய்வுமையம் அறிவித்துள்ளது. இன்றுமுதல் 17 ஆம்தேதி வரைக்கும் தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சியின் காரணமாக, இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]