கமல் பிறந்தநாள் வீட்டுக்கு சென்று ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா மகன் உதயநிதி மருமகள் சபரீசன்உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேரில் சென்று கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார் அப்போது சாருஹாசன் உடல் நிலையையும் கேட்டு அறிந்தார் .இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

கமல் நடிக்கும் புதிய படத்தின் இசை அமைப்பாளர்

நடிகர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்கிறார் சண்டை இயக்குனர்கள் அன்பளிப்பு இந்த படத்தை இயக்குகிறார்கள் இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இவர் இதற்கு முன் தமிழில், ‘துருவங்கள் பதினாறு’, ‘போர் தொழில்’, ‘நிறங்கள் மூன்று’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ’துடரும்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம்

ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். கமல்ஹாசன். சுந்தர்.சி இதனை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வெளியாகி உள்ளது.பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக ‘அருணாச்சலம்’ படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி., 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார்.

நிபந்தனை அற்ற மன்னிப்பு |கமலுக்கு கர்நாடக கோர்ட் உத்தரவு |

தமிழில் இருந்து தோன்றியது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் சொன்னதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அவரது படத்தை வெளியிட தடை வைத்துள்ளனர் இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் தொடர்பாக விசாரணை நடந்தபோது நீதிபதி கூறியதாவது:-வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியியல் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்? மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மொழி குறித்த தன் பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற […]