கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

கள்ளக்குறிச்சியில் சம்பவத்தால் சட்டப்பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது சபாநாயகர் அப்பாவு

கள்ளக்குறிச்சி செல்கிறார் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை

விஷ சாராயம் சம்பவம் எதிரொலி கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர் விவரங்கள்:

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா. தற்காலிக பணிநீக்கம். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். திருமதி கவிதா. திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி பாண்டி செல்வி. திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன் உதவி ஆய்வாளர். காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு […]

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள்

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். விஷச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உடல்நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை-மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர்-மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை. குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார், அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம்-மாவட்ட ஆட்சியர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு. உடல் நலம் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.