‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்

இரண்டு மாடல் கார்களை ரஜினிக்கு கலாநிதி மாறன் காண்பித்த நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்.
“ரஜினிக்கு லாபப் பகிர்வு ரூ.100 கோடி”

ஜெயிலர் படம் மூலம் 22 நாட்களில் 625 கோடி ரூபாய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்ததால் லாப பகிர்வு தொகையாக ரூ. 100 கோடிக்கான காசோலையை ரஜினிக்கு கலாநிதிமாறன் வழங்கியதாக தகவல். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ரஜினி ஊதியம் ரூ. 110 கோடி பெற்றார். தற்போது ரூ. 100 கோடி கிடைத்ததால் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக மொத்தம் 210 கோடி ரூபாய் ரஜினிக்கு கிடைத்ததாக தகவல்.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜெயிலர் படத்திற்காக சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்