முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நாணயம்‌ வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்களும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களும்‌ சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நினைவிட வளாகத்திலுள்ள “கலைஞர்‌ உலகம்‌” அருங்காட்சியகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ வரலாற்றுப்‌ புகைப்படங்களை பார்வையிட்டார்கள்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு.எல்‌.முருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]

செம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

செம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் 101-வது பிறந்த நாளை ஒட்டி செம்பாக்கம் வடக்கு பகுதி தெற்கு பகுதி சார்பாக செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், சிட்லபாக்கம் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாளில் பெண்களுக்கு இலவச புடவை

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாகரம் ஆகியோர் ஏற்பட்ட்டில் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவைகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர்தூவி மறியாதை […]

முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (9.3.2024) சென்னை, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டை முன்னிட்டு

கலைஞர்‌ தமிழ்‌ ஆய்வு இருக்கை சார்பில் கலைஞர் தமிழ்‌ குறித்து தயாரிக்கப்பட்ட 100 நூல்களை வெளியிட்டு, நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, அவர்களுடன்‌ முதலமைச்சர்‌ அவர்கள்‌ குழு புகைப்படம்‌ எடுத்துக்‌ கொண்டார்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தனது 71-வது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம்‌ இல்லத்தில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. ‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (1.3.2024) தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவரான மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவில் அனைத்து அரசியல் தலைவர்களாலும் சிறந்த ராஜதந்திரி என போற்றப்பட்டவர். நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. எழுத்து, பேச்சு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தனக்கு நிகர் தானே என ஒளி வீசியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் பெருமையை […]