சென்னையில் தொடர் மழை

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா

விருதாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.