ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு

உடல்நலக்‌ குறைவால்‌ காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ முன்னாள்‌ நீதிபதி கே.சாமிதுரை அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின்‌ அஞ்சலி

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உடல்நலக்‌ குறைவால்‌ காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ முன்னாள்‌ நீதிபதி கே.சாமிதுரை இல்லத்திற்கு (31.08.2023) நேரில்‌ சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மகனும்‌, கேரள உயர்நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதியுமான எஸ்‌.மணிக்குமார்‌ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ கூறினார்‌. உடன்‌ நகராட்சி நிர்வாகத்‌துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ நிலைக்குழு தலைவர்‌ (பணிகள்‌) சிற்றரசு ஆகியோர்‌ உள்ளனர்‌.

என்எல்சி நிலம் எடுப்பு: நீதிபதி வேதனை

நெய்வேலியில் 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காத நீங்கள், பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்கைளை விட்டு கால்வாய் தோண்டியதை பார்க்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது.

அமலாக்கத்துறை மனு – வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது – லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல் வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் […]

அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு

அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கூறியிருந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக […]

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு புனையப்பட்ட பொய் வழக்கு;

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

நீங்க போலீஸ் கிடையாது.. செந்தில் பாலாஜி வழக்கில்.. அமலாக்கத்துறை அஸ்திவாரத்தை ஆட்டிய கபில் சிபல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முக்கியமான சில வாதங்களை வைத்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு […]

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய நீதிபதி

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவு

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

கடந்த 2001 ம் ஆண்டு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து , மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு ,இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு ……