அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சேலத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி முனுசாமியிடம் மோசடி செய்ததாக புகார். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுப்பதாக கூறி ₹65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை

நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 38 சதவீத மாணவர்கள் வேலை தேடி வருகின்றனர். 2024-ல் 21,500 மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் 13,410 பேர் பணியில் சேர்ந்தனர்.