தாம்பரத்தில் 500 மாணவர் பங்கேற்ற செஸ் போட்டி

தாம்பரத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தாம்பரத்தில் ஜி.எம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்,வேலூர், திருச்சி,திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 8வயது 10வயது,13வயது,மற்றும்25 வயதுடைய சுமார் 500 கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் […]
செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 250 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதி பங்களிப்புடன் 39,40, 41,42 ஆகிய வார்டு பகுதிகளில் சிமெண்ட் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது

திருமலை நகர் 2வது பிரதான சாலையில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் பூமி பூஜையுடன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் மற்றும் ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான அளவீட்டுடன் தரமுடன் சாலை பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மண்டலக்குழு தலைவர் கோரிக்கை விடுத்தார்.
செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட திருமலை நகர் 39 வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நரேந்திர குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுபதி ஜெயபிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள கால்வாய் பணிகளை பருவமழைக்கு முன்னதாக நேரத்தில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 23 ஆவது வார்டு சூர்யா அவன்யூ மற்றும் நடேசன் நகர்,

ஓடை தெரு பகுதியில் மழைக்காலங்களில் கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும் பல சிரமங்கள் தாங்கள் சந்திப்பதாகவும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் அருகில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி உதவி பொறியாளர் பழனி நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ் […]
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 39 வது வார்டு திருமலை நகர் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பகுதியில் கட்டன் கால்வாய் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்ஆய்வு செய்தார்

மழைக்காலத்திற்கு முன்பாக கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து பொது மக்களுக்கு சிரமம் ஏதும் இல்லாதவாறு எதிர்வரும் மழைக் காலங்களில் பணியினை செய்துமுடித்திட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட ஷாவலஸ் காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையின்படி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்ததன் பேரில்

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகறிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்க்கு தகுந்த இடத்தை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் தின நன்னாளில் செம்பாக்கம் மண்டலகுழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன்

செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு நகர்புற நல வாழ்வு மையத்துக்கு நேரடியாக சென்று மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 40 வது வார்டு கௌரிவாக்கம் மற்றும் 41 வது வார்டு ராஜகீழ்ப்பாக்கம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் (இரும்புச்சத்து) துத்தநாக மாத்திரை பெட்டகம் வழங்கும் விழா நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் தொடங்கி வைத்து (ஓ.ஆர்.எஸ்) கரைசல் அதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜோசப்சேவியர் மற்றும் அரசு மருத்துவர், […]