ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில், இந்த நாளின் 4வது ஆண்டு நிறைவை கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை இன்று(ஆக. 05) நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில், ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கித் தவிப்பு பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை