6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை மீண்டும் விசாரணை

ஜாமினில் உள்ள சயானுக்கு, நாளை கோவை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கடந்த 5ஆம் தேதி சம்மன் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள் ஏற்கனவே மீட்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – வரும் 12-ம் தேதி தீர்ப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 3- வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார் .இம்மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்;

அமலாக்கத்துறை கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை என வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்ட விவசாயிகள்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமின் ஜாமினில் வெளியே வந்த விவசாயிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்கு (நவ.28) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை! MRI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் நவ.28ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம்;

தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டுமென டிடிஎப் வாசன் மனு. தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சருக்கு ஜாமின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.