ரூ.500 கோடி வசூலைக் கடந்த ‘ஜெயிலர்’

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் ‘ஜெயிலர்’. இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியே 40 லட்சம் வசூலித்ததாக படத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் இது அதிகத் தொகை என்றும் சொன்னார்கள். அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து […]

“ரூ.500 கோடியை நெருங்கிய ஜெயிலர்!”

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.492.50 கோடி வசூல் என தகவல்! தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.142 கோடி வசூல் செய்துள்ளது.

ஜெயிலர் 4 நாள்கள் வசூல் எவ்வளவு

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும்7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. […]

‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்த கூகுள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளது கூகுள் இந்தியா நிறுவனம். “தலைவரு நிரந்தரம், ஒரு வழியாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது” என பதிவிட்டு ‘அண்ணாத்த’ படம் வெளியான தேதியை வெளியிட்டுள்ளது.

‘ஜெயிலர்’ பார்க்க போன தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

‘ஜெயிலர்’ படத்தை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், “டார்க் காமெடி என்றால் திரையில் தோன்றுபவர்கள் சீரியஸான நேரத்தில் காமெடி செய்வார்கள். நமக்கு சிரிப்பு வரும். ஆனால் ஜெயிலரை பார்க்கும்போது திரையில் இருப்பவர்கள் செய்யும் காமெடியை பார்த்து நாம் சீரியஸாகி விடுகிறோம். படத்துக்கு வில்லன் கேரக்டர்தான் முக்கியம். ஆனால் வில்லன் படுத்தே விட்டானாய்யா ரேஞ்சுக்கு இருக்கிறார்” என்றார்.