துயரத்தில் உள்ள இஸ்ரேல் நாட்டில் இருக்கிறேன்;

நான் உங்களுடன் வருந்துகிறேன், தீவிரவாதம் என்ற கொடுமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன்; இன்றும், எப்போதும்”
போரால் உருக்குலைந்துள்ள காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா – இஸ்ரேல் ஒப்புதல்

காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் ஆலோசனை மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென்
ஹமாஸ் அமைப்பு முக்கிய தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒசாமா மசினி உயிரிழப்பு. ஹமாஸின் முக்கிய தலைவர் ஒசாமா அல் மசினியின் வீட்டை குறிவைத்து தாக்கியதில் உயிரிழப்பு – இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் | ‘ஒற்றுமை அரசு’ அமைத்த நெதன்யாகு; கவலைக்குரிய காசா நிலை!

டெல் அவிவ்: காசாவில் ஹமாஸுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் எதிர்க்கட்சியுடன் இணைந்து போர்க்கால ஒற்றுமை அரசை அமைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்புக்குள்ளான காசாவின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அதன்படி, புதிய போர்க்கால அமைச்சரவையில் பிரதமர் நெதன்யாகு, அந்நாட்டின் எதிர்க்கட்சிப் பிரமுகரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை தற்போது நடந்து வரும் போர் […]
காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் போராளி ஒருவர் கிளைடரில் இருந்த மின் வேலியில் மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர்

ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் தனது கடிதத்தில், “இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள். அங்கு போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள அவர்களின் […]
அமெரிக்க விமானப்படையின் B-52 குண்டுவீச்சு விமானம் இஸ்ரேலில் தரையிறங்கியது
பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்- ஹமாஸ்

இஸ்ரேல் பொது மக்கள் வசதிக்கும் பகுதிகள் மீது குண்டுவீசினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு

ஹமாஸ் பயன்படுத்திய இரண்டு சுரங்கப் பாதைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும், காசா நகருக்கு குடிநீர், மின்சாரம், உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு அறிவிப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் வீரர்களை குவித்த இஸ்ரேல்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், […]