ஈரானில் குண்டு வீச இந்திய வான்வெளி பயன்படுத்தப் பட்டதா?

ஈரானில் அமெரிக்கா 3 அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியதாக அறிவித்துள்ளது இதற்காக இந்திய வான் வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது

பதுங்கு குழிகளுக்குள் செல்ல இஸ்ரேல் வேண்டுகோள்

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

அமெரிக்கா தொடங்கிய ஆபத்தான போர் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் ஆபத்தான போரை தொடங்கியுள்ளது. இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் தெரிவித்துள்ளார் அவர் உடனடியாக ரசிய அதிபர் புதினை சந்திக்கவும் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்க தாக்குதல் மூலம் இதுவரை இஸ்ரேலுக்கு பின்னணியில் இருந்தது அமெரிக்கா தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்

பாதாள அறையில் பதுங்கிய ஈரான் அதிபர்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத் துறை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் இரு அலுவலகங்களும் தரைமட்டமாகின.கொமெனிடெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் […]

ஈரான் மீது ஏவுகணைகளை வீசிய இஸ்ரேல். வலுக்கும் போர்

ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது; மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு

ஜெருசலேம்: தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை செய்த ஈரான் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலின் எதிர்தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் […]

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய போது: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றார்.

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான்.பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் இஸ்ரேல் ஜாப்பா நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவு மத்திய கிழக்கில் உஷார் நிலையில் அமெரிக்க படைகள். இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல். இஸ்ரேல் அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை24 மணி நேர உதவி எண்களை டெல்-அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு972-547520711, 972-543278392 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு. […]

உயிருக்கு அச்சுறுத்தல்.. என் மீதான கொலை முயற்சிக்கு ஈரான்தான் காரணம் – டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.