லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது.
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது. செய்யப்பட்டார் தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார். முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை. நடக்கிறது
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டப்பிரிவுகளின் மீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முடிவு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் சுப்ரிம் கோர்ட் உத்தரவு
பெருங்களத்தூரில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை மோதலில் பயங்கரம்

தாம்பரம் அருகே இஸ்லாமிய அடக்கஸ்தலத்தில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு இஸ்லாமிய அடக்கதலத்தில் இரட்டை கொலை, புதுப்பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்த அண்ணாமலை(25), புத்தர் நகர் 3 வது தெருவை சேர்ந்த ஜில்லா (எ) தமிழரசன் (26) ஆகிய இருவரை கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரேதம் காரணமாக பேசும்போது ஏற்பட்ட தகறாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா […]
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
சட்டவிரோத மணல் அள்ளும் விவகாரம் வரும் 25ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள அலுவலகம், பையனூரில் உள்ள அவரது தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே போல் ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் துணை நிறுவனங்களான இயங்கி வரும் தி.நகர் சங்கார தெருவில் உள்ள பண்டாரி என்பவருக்கு சொந்தமான வீடு, வேப்பேரியில் உள்ள வி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், எழுகிணறு பகுதியில் உள்ள ஆதிநாத் ஸ்டீல் நிறுவனம், கிண்டி ஆலந்தூரில் […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி சோதனை

தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை. ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு கொள்முதல் […]
செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை, கியூ பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை!

சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதாகவும், அவர் அளித்த தகவலின் பேரில் சென்னையில் மன்சூரின் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையின் போது தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும் […]