மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]