குரோம்பேட்டையில் தெரு நாய்களுக்கு ராபீஸ் தடுப்பு ஊசி
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.தெரு நாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு ராபீஸ் தொற்றுநோய் பரவி வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக கால்நடை மருத்துவத்துறை சார்பாக தெரு நாய்களுக்கு ராபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பத்மநாப நகரில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வணிக காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன. எனவே இனி […]
கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கம்

கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என உறுதியாகியுள்ள நிலையில், கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
தவறான ஊசியால் இறந்த சிறுமி? – பார்க்கிங்கில் உடலை வீசிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள்

உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியின் கிரிரோர் பகுதியில் உள்ள கர்ஹால் சாலையில் ராதா சுவாமி என்ற தனியார் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில், பாரதி என்ற 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்றிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் […]