கனமழை, மோசமான வானிலை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி சென்றாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய […]

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதமானது. விமானம் புறப்படத் தயாரானபோது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு ஆளுநர் சென்ற இண்டிகோ விமானம் கோவைக்கு புறப்பட்டது.