கோரிக்கை வந்தால் பரிசீலனை : இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து ஐ.நா கருத்து

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றும் படி கோரிக்கை வந்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்.13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு;

டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு; மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்.
பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதம் என்று பெயர் மாற்றுவது தவறல்ல என்று திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உசிலம்பட்டியில் பேட்டியளித்துள்ளனர்.
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் 40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது
சோனியா தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

செப் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் டெல்லியில் சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவும் முடிவு.
இந்தியா பெயர் பாரத் என மாறுகிறதா?: மசோதா தாக்கல் செய்ய திட்டமா ?

செப்.,18 முதல் 22 வரை நடைபெற உள்ள பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ., கட்சி மற்றும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற […]
எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதால் இந்தியா என்ற பெயரை கண்டு பாஜக பயந்து நடுங்குகிறது

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு
உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் அடைந்துள்ளது. எந்த தடங்கல்களும் இல்லாமல் போட்டியை பார்க்கும் வகையில் இருக்கும் 2 இருக்கை டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தியா கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும்

திமுக சனாதன தர்மத்தை தாக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மெளனமாக உள்ளது இந்தியா கூட்டணி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் ராஜ்நாத் சிங்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.