இந்தியா – இலங்கை இடையே செல்லும் பயணிகள் கப்பல் சேவை திடீர் ரத்து

காலை 7.30 முதல் 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல் திடீரென ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம் சோதனை ஓட்டத்தின் போது கப்பலில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைப்பு நாகையில் இருந்து, இலங்கைக்கு கப்பலில் கடல் வழி பயணம் மேற்கொள்ள 40 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாதம் இறுதியில் இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.சென்னை, ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாநியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அக்டோபர் 10ம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க கனடாவுக்கு உத்தரவு: இந்தியா அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகளை வரும் 10ம் தேதிக்குள் திரும்ப அழைக்கும்படி கனடாவுக்கு இந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அங்கு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து நிஜ்ஜார் கொலைக்கு உதவியதாக கூறி இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது. […]

ஆசிய போட்டிகள் – ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சரோவர் சிங், தமிழக வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே […]

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படலாம் ,மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ..

கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ₹200 குறைக்கப்பட்டது. 5 மாநில தேர்தல் மற்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.