இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்; 476 பேருக்கு ஒரு செவிலியர்

இந்தியாவில் சராசரியாக 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் சுகாதாரத்துறை இயங்கிவருவதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், “என்.எம்.சி வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 13 லட்சம் மருத்துவர்களும், 36 லட்சம் செவிலியர்களும் உள்ளனர். தற்போது 706 மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக MBBS இடங்களும் 127% உயர்ந்துள்ளது” என்றார்.

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தை

யூடியூப்பில் முதல் 5 ஆயிரம் ஃபாலோவர்களை பெறுவது எப்படி? என இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடியதாக கூகுளில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘How to’ என்ற பிரிவில் இந்த தேடல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் இடத்தில் சூரிய ஒளியில் இருந்து தோல் மற்றும் முடியை காக்கும் வீட்டு வைத்தியம்? என்ன என்று அதிக மக்கள் கூகுளில் தேடியுள்ளனர். 2023ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட Recipe-களில் மாங்காய் ஊறுகாய் முதலிடம் […]

இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை- உச்சநீதிமன்றம்

காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை- உச்சநீதிமன்றம் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம், சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு கனடா தொடர்ந்து இடம் அளித்து வருகிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது

இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகள் தலையிட்டது ஏற்க முடியாத ஒன்று.

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவரை, அந்நாட்டு வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வருண், உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார். கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு […]

தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

தாய்லாந்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை, அடுத்த மாதம் முதல் மே-2024 வரை நீக்குவதாக, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்கயியலும்.

இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது

முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.

லக்னோவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை, இந்தியா 100 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது

முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது..இங்கிலாந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.34.5 ஓவரில் இங்கிலாந்தை இந்தியா சுருட்டியது.இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.