சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.
இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்! ! ! !இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா – வஙகதேசம் இன்று பலப்பரீட்சை!..

இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது
ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறோம்

-கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
2026ல் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முன்னணி அணிகள்

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், 2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்த அணிகள் இழந்ததுள்ளன. தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே 2026 டி20 உலக கோப்பையில் விளையாட முடியும்.
உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில் சர்ச்சை:விதியை மீறி கோல் அடித்து ஏமாற்றியதா கத்தார்..?

உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், இந்தியா-கத்தார் இடையேயான ஆட்டத்தில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு. விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. 73வது நிமிடத்தில், கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. இப்போட்டியில், கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் […]
உலகக் கோப்பை தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா

கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது. தோஹாவில் நடந்த போட்டியில் கத்தாரிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
5ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது

49 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி 5ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது 49 தொகுதிகளில் ராகுல் காந்தி உள்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் களத்தில் இருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்
இந்தியாவில் வரவிருக்கும் புல்லட் ரயில் பாதைகள்

டெல்லி-அகமதாபாத் : 878 kmடெல்லி-அமிர்தசரஸ் : 459 km டெல்லி-வாரணாசி : 800 km வாரணாசி-ஹவுரா : 760 km மும்பை-நாக்பூர் : 765 km மும்பை-ஹைதராபாத் : 671 km சென்னை-பெங்களூரு-மைசூரு: 435 km
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா ? எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி […]