இந்தியாவில் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல்!

இதில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசமும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் உத்தரபிரதேசமும் முதலிடம் பிடித்துள்ளன!
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இம்ப்ராகிம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு!
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆக்ஸ்ஃபோர்டு கல்வி மையம் வழங்குகிறது

சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், […]
இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் ஷேக் ஹசீனா தப்பி வந்தது எப்படி?

புதுடெல்லி: இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது. இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள், […]
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவிலேயே இருப்பதாக தகவல்!

தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தை அடுத்த 48-78 மணி நேரம் வரை ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் […]
துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெண்கலம்

பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் முதல் பதக்கம் பெற்று சாதனை.
பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு. டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.
மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.18 வது மக்களவையின் பிரதான எதிர்கட்சித் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.10 ஆண்டுகளுக்குப்பின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.