உளவு சதி என கைதான ஜோதி சீனா சென்றுள்ளார்

பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைதான யூடுபர் ஜோதி மல்கோத்ரா பற்றி திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பலமுறை பாகிஸ்தான் சென்றுள்ளார் .ஒரு முறை சீனாவுக்கும் போய் உள்ளார்.அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்

துருக்கியை புறக்கணிக்கும் இந்திய நிறுவனங்கள்

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது இதனால் இந்திய நிறுவனங்கள் துருக்கியை புறக்கணிக்க தொடங்கியுள்ளன துருக்கி விமானத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சிலர் அறிவித்துள்ளனர் துருக்கியில் இருந்து ஏராளமான மார்பில் கற்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன இனிமேல் அவற்றை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர். […]

பாகிஸ்தானின் வாகா எல்லை முழுவதும் மூடப்பட்டது.

இந்தியா -பாகிஸ்தான் இடையே வாகா என்ற இடத்தில் இரு தரப்பு குடிமக்களும் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தற்போது பாகிஸ்தானுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டதால் இந்த எல்லை மூடப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது இதற்கான கடைசி நாள் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அதற்குள் இந்தியாவில் இருந்த பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல் அங்குள்ள இந்தியர்களும் இங்கு வந்து விட்டனர் .தொடர்ந்து எல்லை மூடப்பட்டதால் கடைசி கட்டத்தில் 70 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்..அதேபோல […]

இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா

சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2ஆவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது; வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 50, முஷ்பிகுர் 37 ரன்கள் சேர்த்தனர்.

செஸ் ஒலிம்பியாட் – பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம்

ஹங்கேரியில் நடைபெறும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தல். அஜெர்பைஜான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், ஹரிகா, வந்திகா அக்ரவால் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் தங்கம் உறுதியானது. ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை.

நிலவில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம். இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல்