ஆசிய கோப்பை தொடர் : இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது

முதலில் ஆடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 230 ரன்களில் சுருண்டது. மழை காரணமாக இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் மற்றும் கில் ஆட்டமிழக்காமல் 20.1 ஓவர்களில் இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்…

ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை… பிரதமர் மோடி சிறப்பு பேட்டி… தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்க தொடங்கியதில் இருந்து சாதகமான பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் சில தாக்கங்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவை. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட பசித்த வயிறுகளைக் கொண்ட […]

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன! இலங்கை பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு! இந்தியா பாகிஸ்தானை துவம்சம் செய்யும் கிரகம் சாதகமான நிலையில் உள்ளது.

இந்தியா கூட்டணி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம். தொகுதி பங்கீடுகள் பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்படும். பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு. தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

INDIA கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு!

◼️ கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்◼️ சரத் பவார், என்.சி.பி◼️ மு.க.ஸ்டாலின், தி.மு.க◼️ அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி◼️ சஞ்சய் ராவத், சிவசேனா◼️ தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி◼️ லல்லன் சிங், ஜே.டி.யு◼️ ராகவ் சத்தா, ஆம் ஆத்மி◼️ ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம்◼️ ஜாதவ் அலிகான், எஸ்.பி◼️ டி.ராஜா, சி.பி.ஐ◼️ உமர் அப்துல்லா, என்.சி◼️ மெகபூபா முப்தி, பி.டி.பி

INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மாலை 6. 30 மணிக்கு தொடங்குகிறது

நாளை காலை 10.30 மணிக்கு INDIA கூட்டணியின் லோகோ வெளியிடப்படுகிறது. மேலும் நாளை மதியம் 3.30 மணிக்கு INDIA கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

‘உங்களில் ஒருவனைத் ’தொடர்ந்து ‘Speaking for India’ Podcast

பாஜக ஆட்சி குறித்தும் பன்முகத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘Speaking for India’ என்ற தலைப்பில் Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில் பேச உள்ளார்; இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரைபடம் வெளியிட்ட சீனா! தொடரும் அடாவடித்தனத்துக்கு இந்தியா கண்டனம்! –

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கில் பல சதுர கிலோ மீட்டர் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதிய வரைபடம் ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் […]

இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும் என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்

தென்னாப்ரிக்காவில் பிரதமர் மோடி- சீன அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எல்லைகளில் ரோந்து பணிகள் பதட்டமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவது குறித்து மோடி-ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.