இந்தியாவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை நீடிப்பு
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர மொஹோல், “இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை ஆகஸ்ட் 23, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வியூகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.