குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
குரோஷியா நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. அதன்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு
23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.
அதிமுக அணியில் பா.ஜ.கவுக்கு எத்தன தொகுதி ?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதால், இம்முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டுப் பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 50 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்டுப் பெற விரும்புகிறது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் 20 முதல் 25 தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 40 தொகுதிகளை கொடுத்து, […]