சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு
2025இல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. 1,000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த அளவு. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு மானியங்களை அறிவித்தாலும், அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலை இது வெளிப்படுத்துகிறது. சீன இளைஞர்களிடையே குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதும் காரணமாக பார்க்கப்படுவதால், புதுமண தம்பதிகளுக்கு பண வவுச்சர்கள் […]
சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுடன் உல்லாசம்:கர்நாடகா டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக மாநில அரசு. பெண்ணுடன் அவர் இருக்கும் சுமார் மூன்று வீடியோக்கள் ஒரே கிளிப்பாக வெளியானது. இது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. ஏற்கெனவே, டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய […]
செமிகண்டக்டர் உற்பத்தியில் காலெடுத்து வைத்த இந்தியா
செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த செமிகண்டக்டர் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளான சிலிக்கான் மற்றும் குவார்ட்ஸ் மணல் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் தயாரிப்பதற்காக தமிழக அரசு சென்னை மற்றும் கோவையில் உற்பத்தி பூங்காக்களை தொடங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் சிப்-கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு […]
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர். அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் செழித்து வளர்ந்துள்ள சிந்தி சமூகத்தினரைப் போல […]
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்ப்
சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்துள்ளார் .
இந்தியா- அமெரிக்கா வர்த்தக பேச்சு தொடக்கம்.
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி : – மு.க.ஸ்டாலின்
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி பயணத்தில் மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் […]
இஸ்ரேல்-ஈரான் மோதலால் டெல்லி, மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் […]
இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கடினம்.
இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. […]