தாம்பரத்தில் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுக்கு பொதுவிருந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாம்பரம் செல்வ விநாயகர் கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் அமைச்சர் சி.வெ.கணேசன், தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரமுகர்கள் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுடன் பொருவிருந்தில் கலந்துகொண்டு 50மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன்அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துணை மேயர் கோ.காமராஜ் (15.08.2023) தாம்பரம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

உடன் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை 36 வது வார்டு விஐயலட்சுமி நகரில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சந்திரன் கொடியேற்றினார். விஜயலட்சுமி நகர் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர் ஜெயராமன் விஜயகுமார் பொருளாளர் வைதேகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் என்ற ஊரை சேர்ந்த மாணவன், சுதந்திர தின விழா நான் கண்டு ரசிக்கணும் என கடிதம் எழுதி இருந்தான்

அந்த சிறுவனுக்கு சிறப்பு அனுமதியுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கொத்தலத்தில் கொடியேற்றும் நிகழ்வை காண வந்த காட்சி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரத் திருநாளையொட்டி (15.8.2023) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குரோம்பேட்டையில் செல்வசேகர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி ……

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்து கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வசேகர் நேற்று உயிரை மாய்த்து கொண்ட செய்தி அறிந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமபந்தி விருந்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சுதந்திர தினத்தை ஒட்டி இப்பொழுது பார்த்தசாரதி கோவில் நடந்த சமபந்தி விருந்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; 1000 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு.: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர்.இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர்.இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை […]
VI வழங்கும் சுதந்திர தின அதிரடி ஆஃபர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு விஐ நிறுவனம் ஆகஸ்ட் 18 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.3,099 திட்டத்தில் தினமும் 2ஜிபி, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ்கால், 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.75 தள்ளுபடி, ஓடிடி நன்மைகள் கொடுக்கப்படுகிறது. இதனுடன் நள்ளிரவு 12 – காலை 6 மணி வரை இலவச டேட்டா பயன்படுத்தலாம்.
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி:

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…! செங்கோட்டை, ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு…!