குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு:

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்றும் உலக நாடுகளில் இது தொடர்பாக கடைபிடிக்கப்படும் முறைகளை ஆய்வு செய்து சிறந்தது எது என்றும் பரிந்துரை செய்யும். […]

பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் விவாதம்

இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்

மத்திய அரசின் கடன் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரிப்பு

மத்திய அரசின் மொத்த கடன்தொகை 2024-2025, ஜூன் காலாண்டின் முடிவில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் உயா்ந்து ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் கோடியாக இருந்தது.

தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்வு. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்வு.

தொகுப்பூதியத்தை உயர்த்தியது தமிழக அரசு

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் ₹16 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை மாதம் ₹14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து ₹16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொகுப்பூதியத்தை ₹4000 உயர்த்தி ₹20000ஆக வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

வாரத்துக்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலனை: வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு

வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இது 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் அமல்படுத்தப்படுகிறது.புதுடெல்லி, சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இதில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது […]

சிறுத்தை எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 8% அதிகரிப்பு

சிறுத்தை எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 8% அதிகரிப்புபுதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 13,874 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் தேசிய அளவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 1,022 கூடுதலாக அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.