போலி யுபிஐ செயலியை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்

டாக்சிகளில் பயணித்து விட்டு போலி செயலி மூலம் பணம் அனுப்பியது காண்பித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் அனுப்பியது போல் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் திருப்பதியைச் சேர்ந்த ரியாஸ் ரஃபீக்கை நுங்கம்பாக்கம் போலீஸ் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் வீடு, மெஸ், நிதி மற்றும் தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஒருசில இடங்களில் சீல் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட இடங்கள் […]