மஞ்சள் நிற பேருந்துகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழ்நாட்டில் 100 புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் நிறம் மட்டுமில்லாமல் பேருந்தின் இருக்கை மற்றும் அமரும் வசதி போன்ற வசதிகளும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது! நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது!

மு.க.ஸ்டாலின்‌ 12 கோடியே 24 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ நலக்‌ கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக்‌ கட்டடங்களை திறந்து வைத்தார்‌

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை சார்பில்‌ 12 கோடியே 24 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ நலக்‌ கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக்‌ கட்டடங்களை திறந்து வைத்தார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌, தலைமைச்‌ செயலாளர்‌சிவ்தாஸ்‌ மீனா, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை செயலாளர்‌ ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ நல ஆணையர்‌ அணில்‌ மேஷ்ராம்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நல […]

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன் இ.ராஜமாணிக்கம் பொறுப்பேற்பு

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்‌ஷா மகாலில் நடைபெற்றது. இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் […]

பெருங்களத்தூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வீடுகள்

பெருங்களத்தூரில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் நகர்ப்புற மேம்பாடு வாரிய குடியிப்புகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்பு. பெருங்களத்தூரில் 420 சதுர அடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 192 நகர்ப்புற மறுகுடியிப்பு விடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்தார். குடியிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர கூறினார். உதவி […]